ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கிய பதிய படம் நெடுஞ்சாலை. ஆரி, ஷிவதா நடித்திருந்தார்கள். நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளில் திருடும் ஒரு திருடனை பற்றிய கதை. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது. படத்தை மீடியாக்கள் பாராட்டினாலும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
கடந்த வாரம் இந்தப் படம் கேரளாவில் 10 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. கேரள மக்களுக்கு படம் பிடித்து விட்டது. அதனால் தற்போது மேலும் 20 தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்கள். இன்னும் கூடுதலாக 10 தியேட்டர்களை கேரள விநியோகஸ்தர் கேட்டிருக்கிறார். இந்த லாரி திருட்டு கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலம் என்பதாலும் படத்தின் ஹீரோயின் கேரக்டர் மலையாளி கேரக்டர் என்பதாலும் கேரள மக்களுக்கு படம் பிடித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.