டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் காதலித்து வந்தனர். காதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளித்த உடன் திருமணம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (ஜூன் 7). இருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது.
அமலாபாலின் சொந்த ஊரான கொச்சி அருகே உள்ள ஆலுவாவில் புனித ஜூட் கிறிஸ்தவ தேவாலயத்தில் மாலை 4 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பாதிரியார் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அதன் பின்னர் பிரார்த்தனைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
தமிழ் நாட்டிலிருந்து நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா, சரண்யா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஆகியோர் மட்டும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மஞ்சேரி என்ற இடத்தில் மலையாள பாரம்பரியப்படி நடந்த சங்கீத் என்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மலையாள திரையுலகினர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
வருகிற 12ந் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் காலை 10 மணிக்கு திருமணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழ் திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.