ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர்களில் வெகு சில இயக்குநர்கள் மட்டுமே... மீடியா ஃப்ரண்டலி! இவர்களை எப்போதும் எங்கும் அணுகலாம். செல்போனில் எந்நேரம் தொடர்பு கொண்டாலும் எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவார்கள். இந்த பட்டியலில் லிங்குசாமியும் ஒருவராக இருந்தார். இருந்தார் என்றால்? இப்போது இல்லை என்று அர்த்தம்! அவரது பட விழாக்கள் மட்டுமின்றி மற்ற விழாக்களுக்கு வரும்போதெல்லாம் மீடியாக்களை சேர்ந்த பத்திரிகையாளர்களிடம் நட்பு ரீதியாகவும், தொழில் ரீதியிலும் மணிக்கணக்கில் உரையாடுவார் லிங்குசாமி. காரணம் அவரும் ஒரு காலத்தில் ப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டராக இருந்தவர்.
அதே லிங்குசாமி இப்போதெல்லாம் மீடியாக்களை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். அண்மையில் நடைபெற்ற மஞ்சப்பை பிரஸ்மீட்டுக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்த லிங்குசாமி, மீடியாக்களின் கண்ணில் படாமல் காரிலேயே உட்கார்ந்திருந்தார். விழா தொடங்கிகும்போது காரிலிருந்து இறங்கி வந்தவர் விறுவிறுவென மேடையில் ஏறிவிட்டார். விழா முடிந்ததும் மீடியாக்களை சந்திக்க விரும்பாமல் காரில் ஏறி பறந்துவிட்டார்.
என்ன காரணமாம்?
தமிழ் இனத்துக்கு எதிரான இனம் படத்தை வாங்கி வெளியிட அவர் முயற்சி செய்தபோது, மீடியாக்கள் அவரது செயலை கண்டித்ததோடு, இனம் படத்தை வெளியிட முடியாத அளவுக்கு சிக்கலையும் உண்டாக்கின. அந்தக் கடுப்பு இன்னும் குறையலையாம்.