'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
கேரளாவைச் சேர்ந்தவர் இனியா. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இனியா, வாகைசூடவா படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது சகோதரி ஸ்வாதி மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார். இவர்களது வீடு திருவனந்தபுரம், கரமணை அருகே உள்ள மருதூர்கடவில் உள்ளது.
நேற்று முன்தினம் (ஜூன் 5) இனியா குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றார். படம் பார்த்து திரும்பியவருக்கு அதிர்ச்சி. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோக்கள் திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்க பணத்தை யாரோ கொள்ளை அடித்துவிட்டுச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து இனியா கரமணை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.