ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
காமராஜரின் வாழ்க்கையை டைரக்டர் பாலகிருஷ்ணன் 10 வருடங்களுக்கு முன்பு திரைப்படமாக வெளியிட்டார். காமராஜராக ரிச்சர்ட் மதுரம் நடித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.இப்போது மீண்டும் காமராஜர் படத்தை காமராஜரின் 111வது பிறந்த நாளையொட்டி வெளியிடுகிறார்.
இயக்குனரும், தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணன் இதுபற்றி கூறியதாவது: 2004ம் ஆண்டு காமராஜ் படத்தை வெளியிட்டேன். தற்போது படத்தில் 30 நிமிட காட்சிகளை கூடுதலாக இணைத்து டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி படத்திற்கு மெருகூட்டப்பட்டுள்ளது.
காமராஜரின் 111வது பிறந்த நாளை பெருமைபடுத்தும் விதமாக வருகிற ஜூலை 11ந் தேதி படத்தை மறு வெளியீடு செய்கிறேன். தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. தவிர பெங்களூர், மும்பை, கொல்கத்தா, நகரங்களில் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளிவருகிறது.
இண்டர்நெட், தகவல் தொழில்நுட்பத்துடன் வாழும் இன்றைய இளைஞர்களுக்கு காமராஜ் படம் வாழ்க்கையில் கடைபிடிப்ப வேண்டிய நெறிமுறைகளை கற்றுத் தரும். என்கிறார் பாலகிருஷ்ணன்.