Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஜப்பானில் இங்கிலீஷ் விங்கிலீஷ்…பிரதமரின் மனைவி ரசித்தார்…!

07 ஜூன், 2014 - 13:51 IST
எழுத்தின் அளவு:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜப்பான் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. அந்த படத்தின் பிரீமியர் காட்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி அவரது குடும்பத்தாருடன் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.


கடந்த மாதம் 29ம் தேதி ஜப்பானில் நடைபெற்ற 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் சிறப்புக் காட்சியில் ஜப்பான் நாட்டு பிரதமரின் மனைவி அக்கி அபே மற்றும் பிரபல பாடகியான அக்னஸ் சான் ஆகியோர் கலந்து கொண்டு படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர். இந்த படம் ஜப்பான் முழுவதும் 33 திரையரங்குகளில் இந்த மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது.


உலகம் முழுவதும் உள்ள அவரவர் தாய் மொழியைப் பேசும் மக்கள் ஆங்கிலம் கற்க முயல்வதும், அதைப் பேச முயல்வதும் உலகளாவிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அது இந்த படத்தில் இருப்பதால் எந்த மொழியில் டப் செய்து வெளியிட்டாலும், அனைத்து இடங்களிலுமே வரவேற்பைப் பெறும் வாய்ப்புள்ளது என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.


ஸ்ரீதேவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தமிழ் நடிகை பிரியா ஆனந்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித் ஒரே ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் வெளியாகி வரும் இந்த படத்தில் தமிழ் நடிகர்களும் உலகப் புகழ் பெற்று வருகிறார்கள். ரஜினிகாந்திற்குப் பிறகு நடிகை ஸ்ரீதேவிக்கும் ஜப்பான் நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in