ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
நடிகை மனோரமாவுக்கு சிறுநீரக பாதிப்பால், டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. இன்று அல்லது நாளை, சாதாரண வார்டுக்கு கொண்டு வரப்படுவார். மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என, உறவினர்கள் தெரிவித்தனர். நடிகை மனோரமாவுக்கு, கடந்த வாரம், திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்கு சிறுநீரக கோளாறும் இருப்பதால், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், டயாலிசிஸ் செய்யப்பட்டது. மனோரமாவின் பேரனும், டாக்டருமான ராஜராஜன் அருகில் இருந்து கவனித்து வருகிறார்.
மனோரமாவின் உடல்நிலை குறித்து, உறவினர்களிடம், நேற்று மாலை கேட்டதற்கு, மனோரமா குணமடைந்து வருகிறார். சிறுநீரக பாதிப்பால், டயாலசிஸ் செய்யப்பட்டது. நன்றாக பேசுகிறார். இன்று அல்லது நாளை, சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார். அங்கு, மூன்று நாட்கள் ஓய்வு எடுத்த பின், வீட்டிற்கு அழைத்து செல்ல உள்ளோம் என, தெரிவித்தனர்.