ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கும்கி படத்தில் அறிமுகமானபோது, இத்தனை குறுகிய காலத்தில் நம்முடைய நட்சத்திர அந்தஸ்த்து விண்ணைத்தொடும் என்று லட்சுமிமேனனே நினைத்துப்பாத்திருக்க மாட்டார். சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றியடைந்தது ஒரு பக்கம், பத்தாம் வகுப்பு மாணவி என்ற ப்ரெஷ் லுக் இன்னொரு பக்கம், அவரது காலடியில் பட வாய்ப்புகளை குவித்துவிட்டன. அதோடு, நான் சிகப்பு மனிதன் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்ததும் சேர்ந்து கொள்ள, அனைத்து முன்னணி இளம் ஹீரோக்களின் பார்வையும் லட்சுமி மேனன் பக்கம் திரும்பிவிட்டன.
புதுப்படங்கள் பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும்போதே லட்சுமி மேனனை கதாநாயகியாக கமிட் பண்ணுங்கள் என்கிறார்களாம் இளம் ஹீரோக்கள். இதற்கு கார்த்தியும் விதிவிலக்கில்லை. குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா கார்த்தியை வைத்து கொம்பன் என்ற படத்தை இயக்குகிறார். முத்தையா ஏற்கனவே லட்சுமிமேனனை வைத்து குட்டிப்புலி படத்தை இயக்கியவர் என்பதால் தனக்கு ஜோடியாக லட்சுமிமேனனை கன்ஃபார்ம் பண்ணும்படி சொல்லி இருக்கிறாரார் கார்த்தி. அதன்படி கும்கி பொண்ணை கொம்பனுக்கு ஜோடியாக்கிவிட்டனர். பெரிய ஹீரோக்களின் சிபாரிசு விரல்கள் தன்னை நோக்கி நீள்வதை புரிந்து கொண்ட லட்சுமி மேனன் தன் சம்பளத்தை லட்சத்திலிருந்து கோடியாக்கிவிட்டார்.