பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சின்னத்திரை தொகுப்பாளினியான சான்ட்ரா எமி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். பிறகு கஸ்தூரிமான் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தொடர்ந்து, போராளி, சமர் போன்ற படங்களிலும் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டினார். இதற்கிடையில் சின்னத்திரையில் நிகழ்ச்சித்தொகுப்பாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சான்ட்ரா எமி. திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியவர், சில வருடங்களிலேயே மீண்டும் நடிக்க வந்தார்.
தற்போது சிவப்பு எனக்கு பிடிக்கும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்கிறாராம் சான்ட்ரா எமி. இதற்கிடையில், படு கவர்ச்சியாய் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் உலவவிட்டு வருகிறார் சான்ட்ரா. அதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இப்படியொரு முயற்சியை மேற்கொண்டு வருகிறாராம். திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சி போஸ் கொடுக்க காதல் கணவர் எப்படி சம்மதித்தார்?