டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்திப் பட உலகின் பிரபல பாடகியான நேஹா பசின் தமிழிலும் நிறை பாடல்களை பாடி இருக்கிறார். வசந்த் இயக்கிய சத்தம் போடாதே படத்தில் இவர் பாடிய பேசுகிறேன் பேசுகிறேன் என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து பில்லா, முத்திரை, யோகி, மூன்று பேர் மூன்று காதல், மகாராஜா, வாகை சூடவா என ஏராளமான தமிழ்ப்படங்களில் பாடி இருக்கிறார். வாகை சூட வா படத்தில் இவர் பாடிய போறானே போறானே பாடலும் மிகப்பெரிய ஹிட் பாடலாக இவருக்கு அமைந்தது.
தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் பாடிவரும் நேஹா பசின் மற்ற பின்னணி பின்னணி பாடகிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர். மேடைக்கச்சேரிகளில் பாடும்போதும், டி.வி. நிகழ்ச்சிகளில் பாடும்போதும் படு கவர்ச்சியான உடைகளில் தோன்றி கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சம் அளவுக்கு செமத்தியாய் குத்தாட்டம் போடுகிறார். இப்படி கவர்ச்சி உடையில் நேஹா பசின் நடனம் ஆடுவது மற்ற பின்னணி பாடகிகளை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. இவரால் பின்னணி பாடகிகளுக்கே அவமானம் என்பதுபோல் கருத்து சொல்கிறார்களாம். ரசிகர்கள் மத்தியிலோ நேஹா பசினின் கவர்ச்சி உடைக்கும், நடனத்துக்கும் செம ரெஸ்பான்ஸ். எனவே தன்னை குறை கூறுகிறவர்களைப் பற்றி கவலைப்படாமல் கவர்ச்சி நடனத்தில் கவனம் செலுத்தப்போகிறாராம் நேஹா பசின்.