துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் மகேஸ்வரி. தமிழில் கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர், பாஞ்சாலங்குறிச்சி, மன்னவரு சின்னவரு, சுயம்வரம் உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் திருமணமாகி ஐதராபாத்தில் செட்டிலானவர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த மை நேம் இஸ் மங்கம்மா காமெடி தொடர் பாப்புலர் ஆனது. தற்போது அதே கண்கள் திகில் தொடரில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் குடியிருந்தாலும் மாதத்தில் இரண்டு வாரங்கள் சென்னை வந்து நடித்துக் கொடுக்கிறார். அவரது தாய் வீடு சென்னையில் இருப்பதால் அங்கு தங்கியிருந்து நடித்து வருகிறார்.
மகேஸ்வரி ஒரு காஸ்ட்யூம் டிசைனர். சில படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இப்போது மஹி ஐயப்பன் என்ற பெயரில் ஐதராபாத், மற்றும் மும்பையில் டிசைனிங் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். பணக்கார வீட்டு திருமணங்களுக்கு மணமகன், மணமகளுக்கு உடைகளை டிசைன் செய்து தரும் நிறுவனம் இது. சீரியலில் நடித்த நேரம்போக மீதி நேரங்களில் டிசைனிங் நிறுவனத்தை கவனித்துக் கொள்கிறார்.