ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹாலிவுட், பாலிவுட் என, கலக்கிக் கொண்டிருக்கும் மல்லிகா ஷெராவத், தற்போது இந்தியில், 'டர்ட்டி பாலிடிக்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த, பன்வாரி தேவி பாலியல் கொடுமை சம்பவத்தை மையமாக வைத்து, படம் தயாராகிறது. இதில், பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன், மல்லிகா ஷெராவத் நடித்து வருகிறார். அவருக்கு, இதில் கண்கலங்க வைக்கும், சீரியசான கதாபாத்திரம் என்றபோதும், சில காட்சிகளில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளாராம். ஒரு காட்சியில் தேசிய கொடி போன்ற வண்ணம் கொண்ட ஒரு துணியை, தன் உடம்பில் போர்த்தியபடி நடித்துள்ளாராம். தற்போது, அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளதை அடுத்து, பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.