ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாய் அறிமுகமானவர் ஷெரீன். தனுஷுக்கு ஜோடியாய் அப்படத்தில் நடித்தார். துள்ளுவதோ இளமை படம் ஃபர்ஸ்ட்காப்பி தயாராகி பல மாதங்கள் கிடப்பில் கிடந்தது. யாருமே படத்தை வாங்க முன் வரவில்லை. பிறகு ஒரு வழியாய் படம் வெளியானது. அப்படத்தை இயக்கிய கஸ்தூரிராஜா தொடங்கி, கதாநாயகனாக நடித்த தனுஷ் வரை யாருமே எதிரபாராதவகையில் துள்ளுவதோ இளமை படம் சூப்பர்ஹிட்டானது.
அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகையாய் உயர்ந்தார் ஷெரீன். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், கொஞ்சம் ஓவராகவே ஆட்டம்போட்டார். இயக்குநர், தயாரிப்பாளர்கள் எவரையும் மதிக்காமல் அலட்சியப்படுத்தியதன் காரணமாகவே சீக்கிரமே மார்க்கெட் இழந்தார். அதன்பிறகு படம் இயக்கப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஆளையே காணவில்லை.
இந்நிலையில் பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாய் நடிக்கும் எண்ணத்தில் ஃபோட்டோ ஷூட் பண்ணிய ஷெரீன், தன்னுடைய கவர்ச்சிப் படங்களை பி.ஆர்.ஓ.கள் மூலம் படக்கம்பெனிகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.
காலம் கடந்த ஷெரீனின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? பார்க்கலாம்..!