தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவில் இருந்து ஏற்கெனவே மிருதுளா என்ற பெயரில் இரண்டு நடிகைகள் அறிமுகமாகி ஒருவர் சில படங்களில் நடித்து விட்டு திரும்பிச் சென்று விட்டார். தற்போது ஒருவர் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மூன்றாவதாக மிருதுளா விஜய் என்பவர் ஜெனிபர் கருப்பையா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ரேவதி நடித்த தலைமுறைகள் படத்தை இயக்கிய சரவண பாண்டியன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் இது. தயாரிப்பாளர் டி.எஸ்.வாசன்தான் ஹீரோ. வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். கிஷோர் குமார் இசை அமைக்கிறார்.
சாதாரணமான ஒரு கிராமத்து இளைஞன் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி திடீர் பணக்காரன் ஆனால் அவனிடம் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதுதான் கதையாமம். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள தில்லுமுல்லுகளை புட்டு புட்டு வைக்கிறார்களாம். ரியல் எஸ்டேட் பிசினசில் திடீர் பணக்காரன் ஆகும் ஆசையில் கிராமத்து இளைஞர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராகிறார்கள் என்கிற உண்மையையும் சொல்கிறார்களாம்.