மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபகாலமா செய்திகளில் அடிபடும் நடிகையாக மாறிவிட்டார் ஸ்ருதிஹாசன். இணையங்களில் வெளிவந்த அவரது கிளாமரான புகைப்படங்கள், சுரேஷ் ரெய்னாவுடன் காதல் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். இப்போது மகேஷ்பாபு, தமன்னா நடிக்கும் 'அகாடு' படத்தில் ஒரு பாடலுக்கு 'ஐட்டம்' டான்ஸ் ஆட சம்மதித்துள்ளாராம்.
தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன், தற்போது விஷால் ஜோடியாக 'பூஜை' படத்தில் நடித்து வரும் நிலையில் திடீரென ஒரு பாடலுக்கு நடனமாட முடிவெடுத்திருப்பதை ஆச்சயரிமாகப் பார்க்கிறது தெலுங்கு வட்டாரங்கள். பொதுவாக மார்க்கெட் போன பிறகுதான் நடிகைகள் ஒரு பாடலுக்கு நடனமாக சம்மதிப்பார்கள். அப்படியிருக்க ஸ்ருதி முன்னணி நடிகையாக இருக்கும் போதே இப்படி நடனமாடுகிறாரே என வியக்கிறார்கள்.
அதிலும் அவருடைய போட்டி நடிகையான தமன்னா ஹீரோயினாக நடிக்கும் படத்தில் அவர் ஆடுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்கிறார்கள். பொதுவாகவே பாடல் காட்சிகள் என்றால் ஸ்ருதி ஹாசன் அருமையான கிளாமர் உடையுடனும், அட்டகாசமான அங்க அசைவுகளுடன் பாடல் காட்சிகளுடன் பெயர் வாங்கிவிடுவார் என்பதாலேயே அவரை அணுகியிருக்கிறார்கள் என்கிறார்கள்.
தமன் இசையமைக்கும் 'அகாடு' படத்தில் ஸ்ருதிஹாசன் நடனத்திற்காகவே அட்டகாசமான ஒரு டியூனை அமைத்திருக்கிறாராம். ஹீரோயின், பாடகி, இசையமைப்பாளர் என சினிமாவில் பல அவதாரங்களை எடுத்துள்ள ஸ்ருதிஹாசன், இப்படி ஒரு பாடலுக்கும் நடனமாடி சோலோ டான்சராகவும் மாறியிருப்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஒரு மகேஷ் பாபுவுக்காகவும், படத்தின் இயக்குனர் சீனு வைட்லாவுக்காகவும் சம்மதித்திருக்கலாம் என்கிறார்கள்.