தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.பிரசன்னா. அப்படத்தின் தோல்வி காரணமாக அப்செட்டாக இருந்தவர் தற்போது அதிலிருந்து மீண்டு, சுவாமி சின்மயானந்தாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே. ஆங்கிலத்தில் தாயரிக்கப்படும் இப்படத்திற்கு QUEST என்று தலைப்பு வைத்திருக்கிறார் பிரசன்னா.
இந்தப்படத்தில் சுவாமி சின்மயானந்தா வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா? பிரபல கலை இயக்குநரான தோட்டா தரணிதான். சுமார் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் எடுக்கப்படவிருக்கும் இப்படத்தில் சித்தார்த் நுனி என்பவர் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். அரோரா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் துவங்க திட்டமிட்டிருக்கிறார் ஆர்.எஸ்.பிரசன்னா.
இவர் ஏற்கெனவே மறைந்த ஓளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திரா பற்றி 90 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு ஆவணப்படத்தையும் தயாரித்து இயக்கி உள்ளார்.
இதில் இளையராஜா, கமல்ஹாசன், ரேவதி உட்பட பல திரையுலக பிரபலங்கள் பாலு மகேந்திரா பற்றி உருக்கமான பல சம்பவங்களை பதிவு செய்திருக்கிறார்கள்! இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகவிருப்பதாக சொல்கிறார் பிரசன்னா.