பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு சிவாஜி என்று அழைக்கப்பட்ட அக்னினேனி நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப் படம் மனம். அவரது மகன் நாகார்ஜுனா, பேரன் நாகசைதன்யா நடித்திருந்தனர். மூவருமே தாத்தா, மகன், பேரனாகவே நடித்திருந்தனர். ஸ்ரேயாவும், சமந்தாவும் ஹீரோயின்கள். விக்ரம் குமார் இயக்கி இருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் கடந்த 23ந் தேதி ரிலீசானது. ரிலீசானதில் இருந்தே படம் வசூலை வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் வாழும் தெலுங்கர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். வெளியான ஒருவாரத்தில் 25 கோடி ரூபாயை நிகரலாபமாக தந்துள்ளது. இதனை நாகர்ஜுனாவே தயாரித்திருந்ததால் மொத்த லாபமும் நாகேஸ்ரராவ் குடும்பதிற்கே சென்றுள்ளது. வெளிநாடுகளில் 6 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. 45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படம் 100 கோடி கிளப்பில் சேரும் என்று கூறுகிறார்கள். படத்தின் லாபத்திலிருந்து நாகேஸ்வரராவ் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்க திட்டமிட்டிருக்கிறார் நாகார்ஜுனா.