மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பெல்காம் அழகி லட்சுமிராய். சினிமாவுக்கு வந்து 10வது ஆண்டை நெருங்கினாலும் இன்னும் அவரால் முன்வரிசைக்கு வர முடியவில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் 50 படத்துக்கு மேல் நடித்துவிட்டார். கிரிக்கெட் வீரர் டோனி, ஸ்ரீசாந்துடன் நெருக்கம், பெங்களூர் அரசியல் புள்ளியுடன் தொடர்பு என அவரைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள்தான் வந்ததே தவிர படங்கள் வரவில்லை. இதனால் தனது குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படி தனது பெயரை ராய் லட்சுமி என்று திருப்பி போட்டிருக்கிறார். தற்போது ஆக்ஷன் படங்களில் நடித்து வருவதால் இந்த பெயர்தான் ஸ்டிராங்காக இருப்பதாக அவர் கூறுகிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இதனை பெயர் மாற்றம் என்று சொல்ல முடியாது, சின்ன திருத்தம் அவ்வளவுதான். ராய் என்பதின் ஆங்கிலத்தில் கூடுலாக ஒரு ஏ வும் சேர்த்திருக்கிறேன். என்னை வீட்டில் எல்லோரும் ராய் என்றுதான் கூப்பிடுவார்கள். எனது அப்பா, ராயை முதலாவதாக போட்டுக் கொள் என்று ரொம்ப நாளாகவே சொல்லி வந்தார். அதற்கு இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. ராய் என்பது எங்கள் குடும்ப பெயர் அதனை முதலில் போட்டுக் கொள்வது என் குடும்பத்தை கவுரவப்படுத்துகிற மாதிரியும் இருக்கும் என்பதால் இந்த முடிவு.
பெயர் மாற்றத்துக்கு பிறகு வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் நடந்திருப்பதை உணர்கிறேன். தற்போது இரும்பு குதிரை, அரண்மணை என்ற இரண்டு தமிழ் படத்திலும், மூன்று மலையாளப் படத்திலும், ஒரு கன்னட படத்திலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறேன். கைவசம் இப்போது 7 படங்கள். என்கிறார் பெருமையாக ராய் லட்சுமி.