மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பெங்காலியைச் சேர்ந்த மாடல் அழகி சுபர்னா மலாக்கர். இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள சுபர்னாவை தமிழ் சினிமா ஹீரோயின் ஆக்கியிருக்கிறது. புதுமுக இயக்குனர் பனிந்திரா இயக்கும் ஆயா வடை சுட்ட கதை படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ஒரு அப்பார்மென்ட்டில் நடக்கும் காமெடி கூத்துக்கள் நிறைந்த கதை.
தமிழ் சினிமாவுக்கு வந்ததும், வராததுமாக தனது விதவிதமான போட்டோக்களை முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். கூடவே கிளாமராக நடிக்கவும் தயார், சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும் என்கிற மெசேஜையும் அனுப்பி உள்ளார். இதன் பலனாக முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆயா வடை சுட்ட கதை வெளிவந்த பிறகு அந்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளிவருமாம். தமிழ் சினிமாவில் டாப் இடத்தை பிடிக்காமல் பெங்காலி திரும்ப மாட்டேன் என்று உறுதி எடுத்திருக்கிறாராம் சுபர்ணா.