இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. சமீபத்தில் விஜய் டெலி விருதில் சிறந்த தொகுப்பாளினியாக விருது பெற்றார். இவர் நடத்தி வரும் காஃபி வித் டிடி நிகழ்ச்சி மிகவும் பிரபலம். திவ்யதர்ஷினிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவரும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை மணக்கிறார்.
இதுகுறித்து திவ்யதர்ஷினி கூறியதாவது: நானும் ஸ்ரீகாந்தும் கடந்த 5 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்தோம். எனக்கு என் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியபோது ஸ்ரீகாந்த் வீட்டில் அவருக்கு பெண் பார்க்க தொடங்கினார்கள். நாங்கள் இருவரும் நல்ல பிரண்ட்லியா இருப்பது அவர்களுக்கு தெரியும் ஏன் நீங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்ககூடாதுன்னு கேட்டாங்க. நாங்களும் எங்களுக்குள் கேட்டுக் கொண்டோம். பிரண்டா இருந்தவர் இப்போ லைப் பார்ட்னர் ஆகப்போகிறார். ரொம்ப ஜாலியான, என் மீது அக்கறை கொண்டவர் ஸ்ரீகாந்த். அவர் என் வாழ்க்கையில் வருவது சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாத இறுதியில் திருமணம். என்கிறார் திவ்யதர்ஷின் பூரிப்புடன்.