தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பருத்திவீரனில் தொடங்கி, தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த கார்த்திக்கிற்கு கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியடைந்து விட்டன. அதனால், ஏறுமுகத்தில் சென்று கொண்டிருநத அவரது மார்க்கெட் இறங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் அதை தாங்கிப்பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கும் கார்த்தி, கதை விசயத்தில் முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும், தன்னுடன் இணையும் முக்கிய டெக்னீஷியன்களும் ராசியானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதன்காரணமாக, தனது முதல்படமான பருத்திவீரன் மற்றும் நான் மகான் அல்ல, பையா, பிரியாணி போன்ற படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்த யுவன் ஷங்கர் ராஜாவுடன் அடுத்தடுத்து கூட்டணி சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அதனால் தற்போது அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதற்கடுத்து குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தான் நடிக்கும் கொம்பன் படத்திற்கு யுவன் ஷங்கரை இசையமைக்க வைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளாராம் கார்த்தி. அந்த வகையில், கொம்பன் படத்திற்கு யுவன் இசையமைத்தால், கார்த்தியுடன் அவர் இணையும் 5வது படமாக பட்டியலில் இடம்பிடிக்கும்.