ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலிப்பதாக நீண்டகாலமாகவே திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதை இருவருமே மறுக்கவில்லை. இந்த செய்தியை உண்மை என நம்ப வைப்பதுபோல் பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் சிசிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது விஷால் விளையாடும்போதெல்லாம் உடன் சென்றார் வரலட்சுமி. பார்ட்டி, படப்பிடிப்பு என சென்னையில் விஷால் செல்லும் இடமெல்லாம் வரலட்சுமியும் கூடவே இருக்கிறார்.
விஷால் தயாரித்து நடிக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்ததுபோலவே அங்கேயும் ஆஜராகிவிட்ட வரலட்சுமி, எந்நேரமும் விஷால் உடனே இருக்கிறார். இவர் விஷால் உடன் இருப்பதால் பூஜை படப்பிடிப்பு அநியாயத்துக்கு தாமதமாகிறதாம். வரலட்சுமி கேரவானுக்குள் இருப்பதால் ஷாட் முடிந்ததும் விஷாலும் கேரவானுக்குள் புகுந்து கொள்கிறார். ஷாட் ரெடியாகி உதவி இயக்குநர்கள் விஷாலை அழைக்கப்போனால், உள்ளே வரலட்சுமி உடன் பேசிக்கொண்டு(?) இருப்பதால் கதவை தட்டி ஷாட்டுக்கு அழைக்க உதவி இயக்குநர்கள் தயங்குகிறார்கள். வரலட்சுமி உடன் பேசி முடித்து விஷாலாக வெளியே வந்தால்தான் உண்டு. இதன் காரணமாக அநியாயத்துக்கு படப்பிடிப்பு தாமதப்பட, செம கடுப்பில் இருக்கிறாராம் ஹரி.