Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மனைவியின் உடையை அணிந்த நடிகர்…!

03 ஜூன், 2014 - 11:42 IST
எழுத்தின் அளவு:

இந்தித் திரையுலகில் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வரும் ஒரு படம் 'ஹம்ஷகல்ஸ்'. சஜித் கான் இயக்கத்தில், சைப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக், ராம் கபூர், தமன்னா, பிபாஷா பாசு, இஷா குப்தா மற்றும் பலர் நடிக்கும் இந்த படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது. படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஹீரோக்களான சைப், ரிதேஷ், ராம் ஆகியோர் பெண் வேடங்களில் தோன்றுகிறார்கள். இதன் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து பலத்த கமெண்ட்டுகளை அள்ளி வருகின்றன. சைப் அலிகானின் பெண் தோற்றத்தைப் பார்த்து அவரது மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் பொறாமைப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ரிதேஷ் தேஷ்முக்கின் மனைவியும் நடிகையுமான ஜெனிலியா கூட கணவரின் பெண் தோற்றத்தைப் பார்த்து பாராட்டினாராம்.


அந்த குறிப்பிட்ட பாடல் காட்சிக்காக மனைவி ஜெனிலியாவின் உடையைத்தான் தான் அணிந்ததாக கூறியுள்ளார் ரித்தேஷ். “அந்த குறிப்பிட்ட பாடல் காட்சியில் பெண் வேடத்தில் நடித்த போது எனது மனைவியின் 'ஸ்கர்ட்'டைத்தான் அணிந்து நடித்தேன். என் மனைவி ஜெனிலியாவிடம் அவரது உடை வேண்டுமென்று கேட்டேன். அவரும் அதற்கு சம்மதித்து அவருடைய உடையைத் தந்து உதவினார்,” என்று கூறியுள்ளார்.


இந்த படம் அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாக சிரிக்க வைக்கும் என்கிறார் இயக்குனர் சஜித் கான். இவர் இதற்குமுன் இயக்கிய 'ஹிம்மத்வாலா' படுதோல்வி அடைந்த ஒரு படமாகும். அந்த படம் தோல்வியடைந்ததும் நல்லதுதான். அதன் பின்தான் என்னிடம் பல மாற்றங்கள் நடந்தது. கோபத்தைக் குறைத்துக் கொண்டு சின்சியராக உழைக்க ஆரம்பித்துள்ளேன்,'' எனச் சொல்கிறார் சஜித்கான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in