அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தற்போது தயாரிப்பில் உள்ள படங்கள் முண்டாசுப்பட்டி, அப்புச்சி கிராமம். முண்டாசு பட்டியை திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார். ராம்குமார் இயக்குகிறார். விஷ்ணு, நந்திதா, காளி நடிக்கிறார்கள். அப்புச்சி கிராமம் படத்தை ஐ கேட்ச் மல்டி மீடியா சார்பில் விஷ்ணு முரளி, செந்தில்குமார் தயாரிக்கிறார்கள். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இரண்டு படங்களுமே கிராமத்தை கதை களமாக கொண்ட காமெடி படங்கள்.
அப்புச்சி கிராமம் மூட நம்பிக்கைகள் நிறைந்த கிராமம். வானத்திலிருந்து எரிகல் விழுந்து 20 நாளில் உலகம் அழியப்போகிறது என்ற தகவல் அந்த கிராமத்துக்கு கிடைக்கிறது. அந்த 20 நாளும் அந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்பது கதை. சொல்லி வைத்தமாதிரி எரிகல் அந்த கிராமத்தில் விழுகிறது, உலகமும் அழியவில்லை. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்
முண்டாசுபட்டியில் 1947ம் ஆண்டு ஒரு எரிகல் அந்த கிராமத்தில் விழுகிறது. அதை பார்த்து பயந்த மக்கள் அதிலிருந்த பல மூட நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதில் ஒன்று போட்டோ பிடித்தால் இறந்து விடுவோம் என்பது. ஒரு போட்டோ எடுக்க ஹீரோவும், அவரது நண்பர்களும் அந்த கிராமத்துக்கு செல்லும் அனுபவங்களை காமெடியாக சொல்வது முண்டாசுபட்டியின் கதை.
இரண்டுமே 80களில் நடிக்கிற கதை. இரண்டுமே எரிகல், மூடநம்பிக்கை போன்ற விஷயங்களை கொண்ட படம். இரண்டுமே காமெடிப் படம். இரண்டுமே இந்த மாதம் ரிலீசாகிறது.
"அப்புச்சி கிராமத்தில் எரிகல் பற்றித்தான் மொத்த படமே என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முண்டாசுப்பட்டியில் எரிகல் படத்தின் ஆரம்பத்தில் வரும் சின்ன பிளாஷ் பேக்தான். மற்றபடி மூடநம்பிக்கை, காமெடி என்ற ஒற்றுமைகள் யதேச்சையாக அமைந்தது" என்கிறார் முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார்.