சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இருவரும் இணைந்த முதல் படம் துப்பாக்கி. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால், முன்பு தனது கஜினி படத்தை தெலுங்கு, இந்தியில் இயக்கியது போலவே அப்படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் இயக்கியுள்ளார் முருகதாஸ். அப்படத்தில் அக்சய் குமார் நாயகனாக நடித்திருக்கிறார்.
தமிழை விட இந்தி சினிமாவின் வியாபார வட்டம் பெரியது என்பதால், இன்னும் பிரமாண்டத்தை கூட்டி ஹாலிடேவை படமாக்கியுள்ள முருகதாஸ், இப்படம் தனக்கு இந்தியில் இன்னுமொரு பெரிய பிரேக்காக அமையும் என்று எதிர்பார்க்கிறாராம்.
இருப்பினும், அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே, தமிழில் விஜய் நடிப்பில் கத்தி படத்தை தொடங்கி விட்ட முருகதாஸ், இந்த படத்தை 60 சதவிகிதத்துக்கு மேல் இயக்கிய பிறகு, இப்போதுதான் ஹாலிடே படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். கத்தி படப்பிடிப்பு நடந்து வந்த போது, ஹாலிடே படத்தின் இறுதிகட்ட வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்த முருகதாஸ், தற்போது அப்படத்தின் இறுதிகட்ட பணிகளுக்காக மும்பை சென்றிருக்கிறார்.
ஆக, ஜூன் மாதத்தில் ஹாலிடே படத்தை வெளியிடயிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், தீபாவளிக்கு விஜய்யின் கத்தியை வெளியிடுகிறார். ஆக, இந்த வருடத்தில் மட்டும் முருகதாஸ் இயக்கத்தில் இரண்டு மெகா படங்கள் வெளியாகிறது.