Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்தை பாராட்டித் தள்ளும் சோனாக்ஷி சின்ஹா…!

01 ஜூன், 2014 - 14:24 IST
எழுத்தின் அளவு:

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சத்ருக்கன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா 'லிங்கா' படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு முன் 'எந்திரன்' படத்திலும் ரஜினிகாந்த், மற்றொரு நெருங்கிய நண்பரான அமிதாப்பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

'படையப்பா' படத்தில் வரும் வசனம் போல எவ்வளவு வயதானாலும், இன்னும் இளமையான தோற்றத்துடன் ரஜினிகாந்த் இருப்பதால் இன்றைய இளம் ஹீரோயின்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இது பல இளம் ஹீரோக்களை நிச்சயம் பொறாமைப்படவே வைத்திருக்கும். ரஜினியுடன் நடிக்கும் நடிகைகள் அவரைப் புகழ்ந்து பேசுவது வாடிக்கையான ஒன்றுதான். இப்போது அந்த பட்டியலில் சோனாக்ஷியும் இணைந்திருக்கிறார்.

“ரஜினிகாந்த் ஒரு சிறந்த மனிதர். அவர் நடித்த படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால், 'ஹம்' படத்திலிருந்து அவரை ஞாபகம் இருக்கிறது. அந்த படத்தை அடிக்கடி பார்ப்பேன். முதல் நாள் அவருடன் நடிக்கும் போது அவரிடம் போய், 'உங்க கூட நடிப்பது ரொம்ப பெருமை சார், எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு', என்றேன். அவரோ, 'நீங்க ஏன் பதட்டமா இருக்கீங்க. எனக்குதான் நண்பர் மகள் கூட நடிக்கிறோமேன்னு ரொம்ப பதட்டமா இருக்கு,' என்றார்.

'லிங்கா' படத்தின் மூலம் தென்னிந்திய திரை உலகில் அறிமுகமாவதை விட வேறு சிறந்த ஒன்று கிடையாது. ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் பெரிய நடிகர். ஆனாலும், மரியாதையுடனும், பணிவுடனும் தான் அனைவரிடமும் பழகுகிறார். ரசிகர்களிடமிருந்து அவருக்குக் கிடைக்கும் அன்பை மிகவும் மதிக்கிறார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்,” என பாராட்டித் தள்ளுகிறார் சோனாக்ஷி சின்ஹா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in