'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
மதில் மேல் பூனை, நேரம், சைகை, இருவர் உள்ளம் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதி வளர்ந்து வரும் பாடலாசிரியர் வேல்முருகன். இவர், சினிமா மட்டுமின்றி சினிமாவுக்கு வெளியேயும் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.
அதாவது சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனியை மையமான வைத்து ஒரு பாடல் எழுதியிருந்தார். அண்ணாந்து பாரு அந்தரத்தில் ஓடு, கட்டி அடிப்பாரு எங்க சென்னை ஆளு -என்று தோனியின் அதிரடி விளையாட்டை மையப்படுத்தி அவர் எழுதிய பாடல் தோனி ஆன்தம் என்ற பெயரில் வெளியானது.
அதோடு, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அபதுல்கலாமின் 83வது பிறந்த நாளையொட்டி உருவாக்கப்பட்ட இன்னொரு ஆன்தத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறாராம் வேல்முருகன்.
அதுபற்றி அவர் கூறுகையில், அந்த பாடல் அப்துல்கலாமின் பெருமைகளை சொல்லும் பாடல் இல்லை. இப்படியெல்லாம் இருந்தால் நீங்களும் அப்துல்கலாம்தான் என்பதை சொல்லும் விதமான பாடல். உழைச்சா நீயும ஜெயிக்கலாம் என்று தொடங்கும் அந்த பாடல் விரைவில் யு டியுப்பில் வெளியாக உள்ளது. அந்த வகையில் அப்துல் கலாமின் ஆன்தம் எழுதியது எனக்கு பெரிய சந்தோசத்தைக்கொடுத்துள்ளது.
மேலும், இந்த ஆன்தம் எழுதியதற்காக நானோ, இசையமைத்தவரோ, பாடியவரோ யாருமே பணம் வாங்கிக்கொள்ளவில்லை. அப்துல்கலாமைப்பற்றி ஒரு ஆன்தம் உருவாக்க வாய்ப்புக்கிடைத்தை பெருமையாக நினைக்கிறோம் என்று கூறும் வேல்முருகன், இந்த ஆன்தத்தை விரைவில் பாண்டிசேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.