ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஷோலே, குர்பானி, ஷான், பர்னிங் ட்ரைய்ன் போன்ற ஆக்ஷன் படங்கள் இந்தியில் பெரும் பெற்றி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அதிரடி கவர்ச்சிப் படமாக 1985ம் ஆண்டு வெளிவந்தது அட்வென்ஜர் ஆப் டார்ஜான். ஹாலிவுட் டார்ஜான் படத்தை காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என்றாலும், படத்தின் நாயகி கிமி கட்கரின் படு கவர்ச்சியும், ஹேமந்த் பிர்ஜியின் ஜிம் பாடியும் மக்களை அலை அலையாக தியேட்டரை நோக்கி இழுத்தது. முதல் லிப் லாக் முத்தக் காட்சி, சிங்கிள் பீஸ் உடை, போன்றவைகளால் படம் சக்கைபோடு போட்டது. அதிலும் ஒரு காட்சியில் கிமி கட்கர் வெறும் இலைகளை மட்டுமே உடுத்திக் கொண்டு வருவார்.
இப்போது டார்ஜான் படத்தை அதன் இயக்குனுர் பாப்பர் சுபாஷ் ரீமேக் செய்ய இருக்கிறார். டார்ஜானாக வித்யூத் ஜாம்வால் நடிக்கிறார். ஜானேவாக அதாவது கிமி கட்கர் வேடத்தில் நடிக்க சன்னி லியோனை கேட்டிருக்கிறார்கள். அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவரது பேஸ்புக்கில் "நான் ஜானே இல்லை" என்று தெரிவித்திருக்கிறார். அதாவது டார்ஜான் ரீமேக்கில் நடிக்க வில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் இயக்குனர் பாப்பர் சுபாசோ "சன்னி கட்டயாம் நடிப்பார். அவர் நடித்தால்தான் படத்தை ரீமேக் செய்வேன். இன்றைய தேதியில் அவரை விட்டால் ஜானே கேரக்டரில் நடிக்க ஆளே இல்லை" என்று கூறியிருக்கிறார்.