'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பரத் தற்போது நடித்து வரும் படம் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. இது பரத்திற்கு 25வது படம். அவருக்கு ஜோடியாக அட்டக்கத்தி நந்திதா நடிக்கிறார். எல்.ஜி.ரவிசந்தர் என்ற புதுமுகம் இயக்குகிறார். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமியும், விநியோகஸ்தர் மோகனும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படம் கிராமங்களில் சித்த வைத்தியம் செய்யும் வைத்திய குடும்பத்தின் பின்னணியில் உருவாகும் காமெடி படம். அதனால் சித்த வைத்தியர்களை கிண்டல் செய்யும் காட்சிகள் இருக்கா? என்ற கேட்டதற்கு பரத் அளித்த பதில் இது...
"அண்ணே... ஆவூன்னா கோர்ட்டுக்கு போயிடுறாங்கண்ணே. இதுல சித்த வைத்திய குடும்பங்கறது ஒரு சின்ன பேக் டிராப்தாண்ணே... மற்றபடி கதை புல் அண்ட் புல் காமெடி. எம்டன் மகன் படத்துல வடிவேலு அண்ணன்கூட காமெடி பண்ணியிருக்கேன். இதுல 21 காமெடி நடிகர்களோட காமெடி பண்ணியிருக்கேன். சீனு நல்லா இருக்கணுங்றதுக்காக பல சீன்ல நான் டம்மி பீசாகூட இருந்திருக்கேன்.
நான் சித்த வைத்திய குடும்பத்துல 5ம் தலைமுறை ஆளு. "எங்க பாட்டன் முப்பாட்டன் உயிரை கொடுத்து கண்டுபிடிச்சதுடா சித்த வைத்தியம் அதையாடா கிண்டல் பண்றீங்க"ன்னு படத்துல ஒரு டயலாக்கே பேசுறேன். பரம்பரை சித்த வைத்தியத்தை பெருமை படுத்துற படம். கல்விதான் வாழ்க்கைக்குகு ரொம்ப முக்கியம்னு மெஜேசும் சொல்றோம். இது காமெடி படம்தான் எதையாவது கிளப்பி விட்டு கலகப்படமா ஆக்கிடாதீங்கண்ணே..." என்றார். பரத்,