‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல இசை அமைப்பாளர் சங்கர் கணேசுக்கு 1986ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு மர்ம பார்சல் வந்தது. அதனை அவர் பிரித்து பார்த்தபோது அதிலிருந்த குண்டு வெடித்து அவரது வலது கை விரல்கள் துண்டானது. வெடிகுண்டு சிதறல்கள் பட்டு உடலெங்கும் காயம் ஏற்பட்டது. பல மாத சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார்.
ஆனாலும் அவர் வலது கை விரல்களை இழந்தார். வலது கண் பார்வையையும் இழந்தார். துண்டான விரல்களை மறைக்க கையில் சாக்ஸ் அணிந்து கொள்வார். கண்ணை மறைக்க எப்போதும் கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்து கொள்வார்.
இப்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு இழந்த வலது கண் பார்வை திரும்ப கிடைத்துள்ளது. சமீபகாலமாக அவருக்கு கண்வலி அதிகமாகவே சென்னயில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு கண் ஆபரேஷன் நடந்தது. அவரது கண்ணில் இருந்த வெடிகுண்டு துகள்கள் அகற்றப்பட்டது. குளூட் ஐஓஎல் என்ற நவீன லென்ஸ் பொருத்தும் ஆபரேஷன் முறை வந்ததால் இது சாத்தியமானது.
இதுகுறித்து (சங்கர்) கணேஷ் கூறியதாவது: அந்த விபத்துக்கு பிறகு என் வலது கண்ணில் தொடர்ந்து பிரச்சினை இருந்தது. மங்கலாக தெரிய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் பார்வையே இல்லாது போய்விட்டது. கண்ணாடி போடாமல் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். இப்போது நான் இழந்த பார்வையை மீண்டும் பெற்றிருக்கிறேன் என்றார்.