டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் படம் ரோமியோ ஜூலியட். இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். லக்ஷமன் இயக்குகிறார். இந்தப் படத்திற்காக புரசைவாக்கம் அருகே உள்ள ஒரு காலி மைதானத்தில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, ஜெயம்ரவி, ஹன்சிகா ஆடிய குத்துப்பாட்டு படமாக்கப்பட்டது. ஆர்ட் டைரக்டர் மிலன் இந்த அரங்குகளை அமைத்திருந்தார்.
"இந்த குத்துப்பாட்டு படத்தின் முக்கியமான இடத்தில் வருகிறது. பாட்டு கலர்புல்லாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் விதவிதமான அரங்குகள் அமைத்து படம் பிடித்தோம். அங்கேயே சில முக்கியமான காட்சிகளும் படமாக்கினோம். படத்தை தீபாவளிக்கு முன்னதாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் லக்ஷ்மன்.