ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் கவர்ச்சிப் புயலான மல்லிகா ஷெராவத் புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் 'டர்ட்டி பாலிடிக்ஸ்' என்ற படத்தின் விளம்பரத்தில் தேசியக் கொடியை அவமதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கே.சி. பொக்காடியா தயாரிப்பு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மல்லிகா ஷெராவத், ஓம் பூரி, நஸ்ருதீன் ஷா, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த பன்வாரி தேவி செக்ஸ் ஊழலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மல்லிகா ஷெராவத்தான் பன்வாரி தேவி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
சமீபத்தில் இந்த படத்திற்காக வெளியிடப்பட்ட ஒரு போஸ்டரில் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் முன், ஒரு அம்பாசடர் கார் மீது, கையில் சிடியுடன், தேசியக் கொடி போன்ற ஒரு துணியை மட்டும் அரைகுறையாக போர்த்திக் கொண்டு மல்லிகா ஷெராவத் உட்கார்ந்திருப்பதைப் போன்ற ஒரு விளம்பரம் வெளியானது.
தேசியக் கொடியை அந்த விளம்பரம் அவமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை கே.சி. பொக்காடியா மறுக்கிறார். “ராஜஸ்தானில் உள்ள ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த விளம்பரத்தை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். அசோக சக்கரம் இருந்தால்தான் அது தேசியக் கொடி. ஆனால், இந்த விளம்பரத்தில் அப்படி எதுவுமே இடம் பெறவில்லை. நான் ஒரு படைப்பாளி, எனது பார்வையில் எனது படைப்புத் திறனை வெளிப்படுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
எப்படியோ படத்திற்கு இப்போதே நல்ல விளம்பரம் கிடைத்து விட்டது.