ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தி நடிகை வித்யாபாலன் இன்றைக்கு இந்தியாவில் உள்ள நடிகைகளில் நடிப்பில் நம்பர் ஒண் இடத்தில் இருப்பவர். இவர் நடித்த படங்கள் ஜெயித்தாலும்,தோற்றாலும் இவர் நடிப்பு பேசப்படும். குறுகிய காலத்தில் தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது என புகழின் உச்சியில் இருக்கிறவர். இவர் தற்போது நடித்து வரும் பாபி சோசூஸ் என்ற படத்தில் 12 வேடங்களில் நடித்து வருகிறார். அதில் 6 வேடங்கள் ஆண் வேடம். பிச்சைக்காரர், டப்பா வாலா, மயிலாப்பூர் மாமி, இஸ்லாமிய இளைஞன், பஞ்சாப் சிங், ஜோதிடர் என பல வேடங்கள் போடுகிறார்.
நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். கமல், தசாவதாரத்தில் 10 வேடத்தில் நடித்து அந்த சாதனையை முறியடித்தார். இப்போது வித்யாபாலன் இந்தப் படத்தில் 12 வேடங்களில் நடித்து கமலின் சாதனையை முறியடிக்கிறார். இதில் வித்யாபாலனுடன், அலி பைசல், கிரண்குமார், அர்ஜான் பாஜ்வா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமர் சைஷ் இயக்கும் இந்தப் படம் ஜூலையில் ரிலீசாகிறது. ரிலையன்ஸ் எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.