Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொழிலதிபரைத்தான் திருமணம் செய்வேன் : சமீரா ரெட்டி

23 மார், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

எக்காரணம் கொண்டும் ஒரு நடிகரை திருமணம் செய்ய மாட்டேன். மிகப்பெரிய தொழில் அதிபரைத்தான் மணப்பேன் என்று நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார். பாலிவுட்டில் கோலோச்சி விட்டு, தெலுங்கு, தமிழில் கால் பதித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. நீச்சல் உடையில் தொடங்கி, பட்டுப்புடவை வரை விதவிதமான காஸ்ட்யூம் அணிந்து திரையில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வரும் இந்த ஆறடி உயர நடிகை வாரணம் ஆயிரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெயரிடப்படாத தமிழ் படமொன்றில் நடித்து வரும் சமீரா அளித்துள்ள பேட்டியில், எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமா என்றால் ரெம்ப இஷ்டம். நிறைய படங்களை தியேட்டரில் சென்று பார்த்துள்ளேன். இந்த ஆர்வத்தால்தான் என்னால் சினிமாவில் ஓரளவு நடிக்க முடிகிறது. என்னுடன் படத்தில் நாயகனாக நடிக்கும் நடிகர்களை இணைத்து கிசுகிசு கிளப்புகிறார்கள். இதை கேட்கும்போது ரொம்ப வேடிக்கையாக உள்ளது, என்று கூறியுள்ளார்.

திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் ஒருபோதும் நடிகரை காதலிக்க மாட்டேன். நடிகரை திருமணம் செய்யப்போவதும் இல்லை. மிகப்பெரிய தொழில் அதிபரைத்தான் மணப்பேன். எனது தந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் எனக்கு தொழில் பற்றிய விஷயங்கள் அனைத்தும் அத்துபடி. இதனால் கணவருக்கு தொழிலில் உறுதுணையாக இருக்க முடியும் என்று நம்புகிறேன், என்றார் சமீரா ரெட்டி. விவரமான பொண்ணுதான்!

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

நல்லவன் - Jubail ,சவுதி அரேபியா
13 மார், 2011 - 13:38 Report Abuse
 நல்லவன் சரி, தொழில் அதிபரைக் கல்யாணம் பண்ணிக்கிடுவீங்க! அப்புறம்? மிஞ்சிப் போனா ஒரு ஆறுமாசம் தாக்குப் பிடிப்பீங்களா? கூடிய சீக்கிரம் உங்கள சீரியல்ல பார்க்கலாம்னு சொல்லுங்க!
Rate this:
சிம்பு - simbu,ஜெர்மனி
04 அக், 2010 - 10:21 Report Abuse
 சிம்பு ப்ளீஸ் நான் தொழில் அதிபர் ஆகிற வரைக்கும் பொறுமையா இருங்க அம்மணி.
Rate this:
சும்மா இர்ரா. - dubai kurukku sandhu, dubai.,இந்தியா
20 செப், 2010 - 22:06 Report Abuse
 சும்மா இர்ரா. யக்கோஓஓஓஓஒ. சமீரா அக்கா. கண்டிப்பா எந்த நடிகன கலியாணம் பணலும் ஒரு வருஷம் முடிஞ்ச கையோட எப்ப வென கலட்டி விற்றுவனுக கர ரொம்ப நல்ல தெரிஞ்சி வச்சிருக்கேக்க. அதே மாதிரி நீ படா பொம்பள கில்லாடி தன கோவ்வ். தொழில் அதிர்பன சில வருஷம் ஓட்டிரலாம் அப்புறம் காசுக்கு எப்பவும் பஞ்சம் இருக்கதுங்க்ரத தெள்ள தெளிவா தெரிஞ்சி வச்சிருக்க கா நீ. நீ போலசுக்குவக்கா .சினிமா நடிஹன்ன மார்க்கெட் போய்ட்ட காசும் போச்சி இல்ல. யக்க உன்ன ரொம்பே பிடிச்சிருக்கு. என் தெர்யுமா நயன் தாரா சேச்சி மாதிரி ஆட்டம் ஆடுற கலியாணம் ஆன நடிகன லவ்வட்டனும்னு நினைக்கல பாரு. நீ ரொம்பேஏஏஏஏ நல்லவ கா.
Rate this:
billgatz - bangalore,இந்தியா
16 ஆக, 2010 - 21:22 Report Abuse
 billgatz ஹாய் சமிர டார்லிங் எப்படி இருக்க. நான் உன்னை திருமணம் செஞ்சுக்கிறேன்
Rate this:
fardhi - mannargudi,இந்தியா
22 ஜூலை, 2010 - 15:02 Report Abuse
 fardhi சமீரா உங்கள் பேட்டியை படித்ததும் எனக்கும் தொழிலதிபர் ஆகனும் போல் இருக்கு so வெயிட் பண்ணுங்க
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in