'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
ஒய்திஸ் கொலவெறி என்ற மெகா ஹிட்டுக்குப்பிறகு சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களுக்கு ஹிட பாடல்களை கொடுத்தார் அனிருத். மேலும் தன்னை சினிமாவுக்கு 3 படம் மூலம் கொண்டு வந்த தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்துக்காகவும் வித்தியாசமான இசைக்கருவிகளை தேடிப்பிடித்து இசையமைத்துள்ளாராம்.
இதற்கிடையே அவரது எதிர்கால மார்க்கெட்டை தூக்கி நிறுத்தப்போகும் படமாக தற்போது கிடைத்திருப்பதுதான் விஜய்யின் கத்தி படம். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் அனிருத்துக்கு இசையமைக்க சான்ஸ் கிடைப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. காரணம், ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இருவரும் முன்பு இணைந்த துப்பாக்கி படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ்தான் இசையமைத்திருந்தார்.
மேலும், அந்த படத்துக்கு அவர் ஹிட் பாடல்களையும் கொடுத்திருந்தார். அதனால் வளர்ந்து வரும் அனிருத் எந்த அளவுக்கு சிறப்பான இசையை கொடுக்கப்போகிறார் என்கிற பயம் விஜய் மற்றும் முருகதாஸிடம் இருந்து வந்தது. அதையடுத்து, சில டியூன் மற்றும் பின்னணி இசை அடங்கிய கேசட்டை அவர்களுக்கு கொடுத்தனுப்பி இம்ப்ரஸ் செய்தார் அனிருத். அதன்காரணமாகவே கத்தியில் அவருக்கு இசையமைக்கும் சான்ஸ் கிடைத்தது.
அதனால், இந்த கத்தி தமிழில் தனக்கு மிக முக்கியமான படம் என்று உழைத்துக்கொண்டிருக்கும் அனிருத், ஒவ்வொரு பாடலுக்கும் கிட்டத்தட்ட 50 டியூன்களை ரெடி பண்ணி அதிலிருந்து ஒன்றை அவர்களிடம் ஓ.கே வாங்கி பின்னணி இசைகோர்க்கிறாராம். மேலும், விஜய்யின் ஓப்பனிங் பாடலை தானே பாடியுள்ள அனிருத், விஜய்யை இரண்டு பாடல்களை பாட வைத்திருக்கிறார். மேலும், தான் இசையமைத்த வணக்கம் சென்னை என்ற படத்தில் ஓ பெண்ணே என்ற பாடலை பாடிய பிரபல இந்தி இசையமைப்பாளரான விஷால் தலானி என்பவரையும் கத்தியில் விஜய்க்காக ஒரு பாடலை தற்போது பாட வைத்துள்ளார்.