திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ராஞ்சனா படத்தில் நடித்து விட்டு வந்த தனுஷ், ஒரே நேரத்தில் வேலையில்லா பட்டதாரி, அனேகன், வெற்றிமாறன் இயக்கும் படம் என மூன்று படங்களில் கமிட்டானார். ஆனால், இந்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இந்தியில் பால்கி இயக்கும் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் இதுபோன்ற வாய்ப்பு இதன்பிறகு கிடைப்பது அரிது என்பதால், உடனடியாக கமிட்டாகி விட்டார்.
விளைவு, தான் தயாரித்து நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தை கிட்டத்தட்ட முடித்திருந்த தனுஷ, அனேகன் படத்திற்கு கொடுத்த கால்சீட்டை நிறைய மாற்றம செய்தார். அதோடு, வெற்றி மாறனையும் சில மாதங்களாக டீலில் விட்டார். இதனால், கே.வி.ஆனந்த், வெற்றிமாறன் இருவருமே தனுசுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படடது.
ஆனால், தற்போது பால்கியின் இந்தி படத்தை ஓரளவு முடித்துவிட்ட தனுஷ், சில மாதங்களாக கண்டுகொள்ளாமல் இருந்த அனேகன் படப்பிடிப்புக்கு இப்போது மறுபடியும் வந்திருக்கிறார். அதனால். இந்த முறை தனுஷை விட்டு விட்டால் வெற்றி மாறன் படத்துக்கு தாவி விடுவார் என்று கடைசி கட்ட படப்பிடிப்பை ஜூன் 2-ந்தேதி முதல் சென்னை, பாண்டிச்சேரியில் நடத்தி, அதன்பிறகு ஜூலையில் ஸ்காட்லாந்தில் பாடல் காட்சிகளை முடித்து விட திட்டமிட்டுள்ளாராம் கே.வி.ஆனந்த்.