Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவுக்கு பிடித்த ஒரே தமிழ்ப்பாட்டு!

30 மே, 2014 - 15:51 IST
எழுத்தின் அளவு:

ரெண்டு படத்தில் மாதவனுடன் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் அனுஷ்கா, அதையடுத்து விஜய்யுடன் வேட்டைக்காரன், விக்ரமுடன் தெய்வத்திருமகள், தாண்டவம், சிம்புவுடன் வானம், சூர்யாவுடன் சிங்கம், சிங்கம்-2, கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் என பல படங்களில் நடித்து விட்டார்.


ஆனால், எந்த படத்திலும் பாடல்களை அவர் ரசித்து கேட்டதே இல்லையாம். பாடல் காட்சியை படமாக்குகிறார்கள் என்று சொன்னதும், க்ளோசப் ஷாட் என்றால் மட்டும் அந்த வார்த்தையை வாயசைத்தபடி நடனமாடுவாராம். மற்றபடி அந்த பாடலை கேட்பதோ, அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளும் பழக்கமோ அவருக்கு கிடையாதாம்.


ஆனால், விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்துக்காக என் உச்சி மண்டையில சுர்ருங்குதே என்ற பாடலுக்காக நடனமாட ஸ்பாட்டுக்கு வந்தபோது, அந்த பாடலைக்கேட்டதும் குஷியாகி விட்டாராம் அனுஷ்கா. அதையடுத்து, விஜய்யிடம் அந்த பாடலுக்கு இசையமைத்தது விஜய் ஆண்டனி, அந்த பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை என்பதை கேட்டு தெரிந்து கொண்டவர், முதன்முறையாக அந்த பாடலை விரும்பிக்கேட்டபடி தானும் பாடி மகிழ்ந்தாராம் அனுஷ்கா.


அதோடு நில்லாமல், அப்போதெல்லாம தமிழில் ஓரளவுகூட பேச தெரியாதபோதும், அந்த பாடலை திரும்பத்திரும்ப கேட்ட அனுஷ்கா, படப்பிடிப்பு தளங்களில் ஓய்வாக இருக்கும்போது என் உச்சி மண்டயில சுர்ருங்குதே என்ற அந்த பாடலின் பல்லவியை அவ்வப்போது இப்போதுவரை லயித்து பாடுகிறாராம். ஒரே பாட்டையே திரும்பத்திரும்ப பாடுகிறீர்களே ஏன் வேறு பாட்டே தெரியாதா? என்று யாராவது கேட்டால், தமிழில் எனக்கு தெரிந்த ஒரே பாட்டு மட்டுமின்றி எனக்கு பிடித்த ஒரே பாட்டும் இதுதான் என்கிறாராம் அனுஷ்கா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in