Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா-த்ரிஷாவுக்கு நோ அப்ஜெக்சன் கேட்கிறார்களாம்!

29 மே, 2014 - 16:54 IST
எழுத்தின் அளவு:

பென்சில் படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த படத்தில் அவர் நடித்த காரணத்தினால் அவருக்கு வரவேண்டிய பாலா உள்பட சில முன்னணி டைரக்டர்களின் படங்கள் வேறு இசையமைப்பாளர்கள் பக்கம் சென்று விட்டது. இருப்பினும் கலங்கவில்லை ஜி.வி.பிரகாஷ். முன்வச்ச காலை பின் வைக்கிறதில்லை என்ற கொள்கையோடு, பென்சில் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், அவசரகதியில் அடுத்த படத்திற்கான கதையைக்கேட்டு அதில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.


ஆனால், அந்த படத்துக்கு இளைஞர்களை கவரும் வகையில் டைட்டில் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள், நயன்தாரா இல்லேன்னா த்ரிஷா என்று பெயர் வைத்தனர். அதனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு இந்த படம் கண்டிப்பாக ஹிட் என்று பலரும் அவர்களுக்கு ஆரூடம் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இதனால், பென்சில் படத்தை விட நயன்தாரா இல்லேன்னா த்ரிஷா படத்தின் மீது அதிக நம்பிக்கையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்..


இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலை சேம்பரில் பதிவு செய்யச்சென்றபோது, இரண்டு மெகா நடிகைகளின் பெயர் டைட்டிலில் இருப்பதால் இதற்கு அனுமதி கொடுத்தால் பிறகு பிரச்னை வரும் என்று அந்த நடிகைகளிடம் நோ அப்ஜெக்சன் கடிதம் வாங்கி வருமாறு கூறி விட்டார்களாம். அதையடுத்து, அப்படத்தின் கதையை நயன்தாராவிடம் சொல்லி நோ அப்ஜெக்சன் கடிதம் வாங்கி விட்டவர்கள், இப்போது த்ரிஷாவை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவரும் நோ அப்ஜெக்சன் சொல்லி விட்டால், நயன்தாரா இல்லேன்னா த்ரிஷா டைட்டீல் ஓ.கேவாகி விடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in