மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
உலக அளவில் இண்டர்நெட்டில் அதிகமாக தேடப்படுகிறவர்களின் 100 பேர் பட்டியலை டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விக்கிபீடியாவில் தேடப்பட்டவர்கள். அந்த பட்டியலில் இந்திய அளவில் கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சச்சின் முதல் இடத்தையும், இந்தி நடிகர் ஷாருக்கான் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். சர்வதேச பட்டியலில் சச்சின் 68 வது இடத்திலும், ஷாருக்கான் 99வது இடத்திலும் உள்ளனர்.
உலக அளவில் முதல் இடத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சும், தற்போதைய அதிபர் பராக் ஒபாமா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். பாப் பாடகிகள் மரடோனாவுக்கு முன்றாவது இடமும், பியான்சா நோஸச் 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஹிலாரி கிளிண்டன் 11வது இடத்திலும், ரஷிய அதிபர் புதின் 27வது இடத்திலும், போப் பிரான்சிஸ் 70 இடத்திலும், பார்முலா ஒன் கார்பந்தைய வீரர் மைக்கேல் ஷூமேக்கர் 77வது இடத்திலும் உள்ளனர். 100 பேர் பட்டியலில் இடம் பிடித்த இரண்டே இந்தியர்கள் சச்சினும், ஷாருக்கானும் மட்டுமே.