டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொய் சொல்ல போறோம் படத்தில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய், ஏகன், கோவா, கோ, பலே பாண்டியா, சட்டம் ஒரு இருட்டறை படங்களில் நடித்தார். எந்த படமும் பியாவுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது கூட்டம் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கிவா முத்தமிடாதே படங்களில் நடித்து வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த பியா விஜயசாந்திக்கு பிறகு தமிழ், தெலுங்கில் ஆக்ஷன் ஹீரோயின்கள் இடம் காலியாக இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கான முயற்சியில் இறங்கி விட்டார். சமீபத்தில் ஒரு மலையாளப் படத்தில் மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் செய்து ரசிகர்களை கவர்ந்தார்.
மும்பையில் கிக் பாக்சிங் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து அதையும் கற்றுக் கொண்டார். தற்போது குதிரையேற்றம் கற்ற வருகிறார். "ஹீரோயின்கள் ஏதாவது ஒரு புது விஷயத்தை கற்றுக் கொண்டால் அது ஏதாவது ஒரு படத்தின் கேரக்டருக்காகத்தான் இருக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். என்னிடம் பலர் அப்படித்தான் கேட்டார்கள். ஆனால் நான் எந்தப் படத்திற்காகவும் கற்றுக் கொள்ளவில்லை. எனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியும் என்பதால் அதனை மலையாளப்படத்தில் செய்தேன். மற்றபடி கிக் பாக்சிங் கற்றுக் கொண்டது, தற்போது ஹார்ஸ் ரைடிங் கற்றுவருவது எனது சொந்த விருப்பத்தின் பெயரில்தான். ஆண்களுக்கு நிகரான உடல் பலத்தையும், மன பலத்தையும் பெற நினைப்பது தவறா?" என்று கேட்கிறார் பியா.