தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அலிபாபா, கழுகு போன்ற படங்களில் நடித்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் படம் - வானவராயன் வல்லவராயன். இன்னொரு நாயகனாக அதாவது கிருஷ்ணாவின் தம்பியாக - தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை வழங்கும் தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராஜமோகன்.
வானவராயன் வல்லவராயன் படம் பற்றி இயக்குநர் ராஜமோகன் என்ன சொல்கிறார்?
அண்ணன் தம்பி பாசம்தான் கதையோட்டம். அதை காமெடியாக சொல்கிறோம். படம் ஆரம்பம் முதல் கடைசிவரை காமெடிதான். கிருஷ்ணா கோவை பாஷையை முறைப்படி பயிற்சி எடுத்து பேசி அசத்தி இருக்கிறார். திருமண மண்டபங்களில் காலம்காலமாக "மணமகளே மருமகளே வா வா" என்ற பழைய பாடல் மட்டுமே ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இனி வானவராயன் வல்லவராயன் படத்தில் இடம் பெரும் வாங்கம்மா.... வாங்கப்பா.... வாங்கண்ணே.... வாங்கத்தே... வா மாமா..... என்ற உறவுகள் அனைவரையும் கல்யாணத்திற்கு அழைக்கும் பாடலும் ஒலிக்க ஆரம்பிக்கும் பாருங்கள். இந்தப் பாடல்காட்சி ஒரு திருமண மண்டபத்தில் படமாக்கப்பட்டபோது அலங்காரத்திற்காக தினமும் 50,000 ரூபாய் செலவில் மலர் வாங்கப்பட்டு திருமண மேடை அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. பூ வாங்க மட்டும் 2,50,000 செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். என்று சொல்கிறார் இயக்குநர்.
பூ வாங்க மட்டும் இரண்டரை லட்சமா? நம்ம காதில பூ சுத்துற மாதிரி இருக்கே..!