சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கேரளத்திலிருந்து கோலிவுட் வந்த இளம் நடிகைகளில், முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடித்ததோடு அல்லாமல், தற்போது செமத்தியாய் பணத்தை அறுவடை கொண்டிருப்பது இரண்டு நடிகைகள்தான். ஒருவர்...லட்சுமி மேனன், மற்றொருவர்..நஸ்ரியா! தனக்கு பிறகு தமிழ்ப்படங்களில் நடிக்க வந்த நஸ்ரியாவுக்கு, தன்னைவிட அதிகமான மார்க்கட் வேல்யூ இருப்பதை அவரது போட்டியாளரான லட்சுமிமேனனால் அத்தனை எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை போலிருக்கிறது.
நஸ்ரியாவின் வெற்றிக்கான காரணம் என்ன? என்ற அவரது தொழில் ரகசியத்தை தெரிந்து கொள்ள துடியாய்துடித்துக்கொண்டிருக்கிறாராம் லட்சுமி மேனன். எனவே அதை தெரிந்து கொண்டு வந்து சொல்லும்படி தன்னிடம் வேலைபார்ப்பவர்களிடமும், தான் நடிக்கும் படத்தின் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களிடமும் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறாராம் லட்சுமி மேனன்.
அவரது உத்தரவின்படி, நஸ்ரியா என்ன செய்கிறார்? அவருக்கு எத்தனை படங்கள் கமிட்டாகி உள்ளன? எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? உட்பட நஸ்ரியாவைப் பற்றிய சகல தகவல்களையும் ஒன்றுவிடாமல் திரட்டி வருகிறது லட்சுமிமேனனின் உளவுப்படை.