பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் ஆண்டனி நடித்து, இசை அமைத்து வரும் படம் சலீம். ஸ்டூடியோ 9, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 5ந் தேதி நடக்கிறது. இதையொட்டி விஜய் ஆண்டனி ஒரு புதுமையான விஷயத்தைச் செய்கிறார்.
அதாவது படத்தின் தலைப்பின்படி சலீம் என்ற பெயரைக் கொண்டவர்கள் அவர்களது பெயர் மற்றும் முகவரியும், salimmeetssalim@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் விஜய் ஆண்டனியை சந்தித்து பேசலாம். ஆடியோ விழாவில் பங்கேற்கலாம்.
சலீம் படத்தில் விஜய் ஆண்டனி முஸ்லிமாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாய அக்ஷா பர்தஷ்னி நடிக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். என்.வி.நிர்மல் குமார் இயக்குகிறார். ஒரு வருடத்துக்கு மேலாக படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. இப்போது படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.