இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்துள்ள 'கோச்சடையான்' படத்தின் இசை பற்றி ரசிகர்கள் அதிகமாகவே பேசி வருகிறார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது என அனைவருமே பாராட்டுகிறார்கள். ஆனால், கோச்சடையான் படத்திற்கு இசையமைப்பது தனக்கு சவாலாக இருந்தது என்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.
“கோச்சடையான் படம் எனக்கு இசையமைப்பதற்கு மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் பின்னணி இசைக்கு இருந்த முக்கியத்துவமும், அதைக் காட்சிகளுக்குத் தகுந்தவாறு மிக்ஸ் செய்து கொடுப்பதும் கடினமாக இருந்தது. என்னுடைய குழுவுக்குத்தான் நான் நன்றிகளைச் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஒரு படத்திற்கு இசையமைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. கதையின் மீது இருந்த நம்பிக்கை எங்களை நன்றாக இசையமைக்க வைத்தது. அது அருமையான டான்ஸ் பாடல்களிலும் சரி, எமோஷனலான காட்சிகளிலும் சரி இசையை சிறப்பாக அமைக்க முயற்சி செய்தோம்.
ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த முதல் மோஷன் கேப்சரிங் படத்திற்கு மகத்தான ஆதரவைக் கொடுத்து வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி என,” ரஹ்மான் தெரிவித்துள்ளார்.