ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை வித்யா பாலன். தொடர்ந்து அவர் நடித்த 'கஹானி' திரைப்படமும் அவரது நடிப்புத் திறமையை நிரூபித்தது. அவர் தற்போது நடித்து வரும் படம் 'பாபி ஜாசூஸ்'. பிரபல நடிகையான தியா மிர்சா தயாரித்துள்ள இந்த படத்தில் பல்வேறு விதமான தோற்றங்களில் நடித்துள்ளார் வித்யாபாலன். அவற்றில் ஒரு சில ஆண் வேட தோற்றங்களும் உண்டு.
இப்படத்தில் அவர் ஒரு தனியார் துப்பறியும் பெண் நிபுணராக நடித்துள்ளார். துப்பறியச் செல்லும் போது அவர் போடும் பல கெட்டப்புகளில் பிச்சைக்காரர், வழுக்கைத் தலையுடன் கூடிய ஜோசியர், மௌலானா, பியூன், டப்பா வாலா என பல கெட்டப்புகள் உள்ளது. இவற்றில் அவரைத் துளி கூடி அடையாளம் காண முடியாது என்கிறார்கள் படக் குழுவினர். ஏற்கெனவே, பிச்சைக்காரத் தோற்றத்தில் வித்யாபாலன் உள்ள புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படத்திற்காக அவரை 122 தோற்றங்களில் டெஸ்ட் செய்து கடைசியாக 12 தோற்றங்களில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதற்காக இரண்டு வாரங்கள் அவர் ஒதுக்கியிருக்கிறார். தினமும் ஆறு முதல் எட்டு கெட்டப்புகளில் மேக்கப் போடப்பட்டு, அதில் எது கதைக்குப் பொருத்தமாக அமைந்ததோ, அதை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
வித்யாபாலனின் இந்த உழைப்பு அவருக்கு மீண்டும் ஒரு தேசிய விருதை பெற்றுத் தரும் என்கிறார்கள் படக் குழுவினர்.