'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
டைரக்டர் மகேந்திரன் இயக்கிய படங்களில் ஜானியும் குறிப்பிடத்தக்க படம். இதில் ரஜினிகாந்த் சலூன் கடை வைத்திருப்பவராக ஒரு கெட்டப்பில் நடித்திருந்தார். ரஜினியும் அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நேர்த்தியாக நடித்திருந்தார். அதனால் இப்போதுவரை ரஜினி நடித்த படஙக்ளில் ஜானியும் மேற்கோள் காட்டப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், அப்படத்தில் ரஜினிகாந்த் நடித்த அதே வேடத்தில் இப்போது கிடாய் பூசாரி மகுடி என்ற படத்தில் நடிக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். ஜானியில் ரஜினி நடித்த ரோல் மட்டுமின்றி,அவர் அணிந்தது போன்ற காஸ்ட்யூம்களை அணிந்து நடிக்கிறாராம் பவர். அதனால் கண்ணா லட்டு தின்ன ஆசையாபடத்திற்கு பிறகு இப்படம் தனக்கு இன்னொரு திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறாராம் பவர்ஸ்டார்.
மேலும், இப்படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் இளையராஜாவுக்கு மிகவும் கவர்ந்ததால், படத்துக்கு அற்புதமாக பாடல்கள் அமைத்துக்கொடுத்திருக்கிறாராம். அதோடு, ஒரு பாடலின் சூழல் தன்னை மிகவும் கவர்ந்ததால் தானே அந்த பாடலை பாடியுள்ளாராம். பல புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் சிங்கம்புலி கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறாராம்.