Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டார்ட் கட் சொல்லும் அர்ஜுன்!

27 மே, 2014 - 12:34 IST
எழுத்தின் அளவு:

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக ஸ்டார்ட் கட் சொல்வதை மறந்திருந்த நடிகர் அர்ஜுன் ஜெய்ஹிந்த் - 2 படம் மூலம் மீண்டும் ஸ்டார்ட் கட் சொல்கிறார். 1992 ஆம் ஆண்டு சேவகன் படத்தின் மூலம் இயக்குநரானவர் அர்ஜுன். அப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பிரதாப், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை உட்பட சில படங்களை இயக்கினார். கடைசியாக இவர் இயக்கிய மதராஸி படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது, தோல்வியடைந்தது. எனவே டைரக்ஷனை மறந்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் அர்ஜுன்.


அவருக்கு, அவர் நடித்த படங்களும் கைகொடுக்கவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான மூன்று பேர் மூன்று காதல் படமும் தோல்வியைத்தழுவியது. எனவே மீண்டும் இயக்குநர் நாற்காலியில் அமர முடிவெடுத்த அர்ஜுன், ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜெய்ஹிந்த் -2 படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் 20 கோடி ரூபாய் செலவில் இப்படத்தைத் தயாராக உள்ளதாம்.


ஜெய்ஹிந்த் - 2 படத்தைப் பற்றி அர்ஜுனிடம் கேட்டபோது, தற்போதைய கல்வி முறையையும், அதன் குறைபாடுகளையும் சொல்லும் படமாக இப்படம் இருக்கும். அப்துல் கலாம் அவர்களின் கனவான அனைவருக்கும் கல்வி, இந்தியாவை சூப்பர் பவராக்கும் திட்டம் ஆகியவற்றை இப்படம் பிரதிபலிக்கும். ஜெய்ஹிந்த் - 2 படத்திற்கும், இதன் முதல் பாகத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது முற்றிலும் வித்தியசமானதாக இருக்கும். சென்னை, மும்பை, டில்லி, மற்றும் வெளிநாட்டிலும் இப்படம் படமாக்கப்பட உள்ளது - என்று சொல்கிறார் அர்ஜுன்.


இந்தப் படத்தை பத்திரிகையாளர்களுக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் சமர்ப்பிக்க இருக்கிறாராம் அர்ஜுன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in