Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் ஸ்ரீகாந்தின் கனவுப்படம் நம்பியார்!

27 மே, 2014 - 12:21 IST
எழுத்தின் அளவு:

ஓம் சாந்தி ஓம் படத்தை அடுத்து ஸ்ரீகாந்த் நடிப்பில் அடுத்தப் படமாக தொடங்கப்பட்ட படம் - நம்பியார். பிரபல இயக்குநர் ராஜமௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்த கணேஷா இயக்குகிறார். படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சயின்ஸ்ஃ பிக்ஷன் படம். அறிவியல் களம் சார்ந்த, முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது நம்பியார். நடிகர் ஸ்ரீகாந்த் இதை தனது கனவுப்படம் என்றே குறிப்பிடுகிறார்.


அறிவியல் களம் சார்ந்த காமெடிப் படம் என்கிறார்கள். அப்புறம் என்னத்துக்கு நம்பியார் என்ற தலைப்பு? எம்ஜிஆர் அவர்களின் மிக ராசியான வில்லன் அவர். முதலில் நம்பியாரை புக் பண்ணிவிட்டீர்களா என்று கேட்பாராம் மக்கள் திலகம். இந்த படத்தின் கதைக்கும் நம்பியார் என்ற தலைப்புக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கும். படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். - என்கிறார் ஸ்ரீகாந்த்.


தலைப்பு மிகப்பெரிய ஜாம்பவானின் பெயராச்சே...கடைசி நேரத்தில் எதாவது பிரச்சனை ஏற்படாதா? எந்தவொரு பிரச்சனையும் உருவாக்கிவிடக்கூடாது என்பதால்தான் நம்பியார் அவர்களின் மகன் மோகன் நம்பியார் அவர்களை அணுகினோம்., நீங்கள் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி கொடுத்ததோடு தனது வாழ்த்தையும் தெரிவித்தார். - என்கிறார் ஸ்ரீகாந்த்.


நம்பியார் படத்துக்கு இன்னொரு பலமாக இவர்கள் கருதுவது காமெடியன் சந்தானத்தை. கதையைக் கேட்ட மாத்திரத்தில் அவ்வளவு பிஸியான நேரத்திலும் அதிகபட்ச தேதிகளை ஒட்டுமொத்தமாக வழங்கியிருக்கிறாராம். படத்தின் இன்னொரு ஹீரோ சந்தானம் என்கிற அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம். விஜய் ஆண்டனி நடிப்பு மற்றும் பெரிய படங்களுக்கு இசை என பிஸியாக இருப்பதால் முதலில் இசையமைக்க மறுத்துவிட்டவர், நம்பியார் படத்தின் கதையைக் கேட்டவுடன் இசையமைக்க ஒப்புக்கொண்டாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in