நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தமிழ் சினிமாவின் ஆச்சி என்று எல்லோராலும் அழைப்படுபவர் நடிகை மனோரமா. தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே காமெடியில் கொடி கட்டி பறந்த நடிகை என்றால் அது மனோரமா என்றே சொல்லலாம். காமெடி மட்டும் அல்லாது பல்வேறு குணச்சித்திர வேடங்களில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டுள்ளார். இருப்பினும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ஒரு படத்தில் ஒரு பாட்டும் பாடியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை மனோரமா தனது 76வது பிறந்தநாளை இன்று(மே 26ம் தேதி) கொண்டாடினார். மனோரமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் போனிலும், நேரிலும் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். மேலும் பல்வேறு கோயில்களில் இருந்து மனோரமாவிற்கு பிரசாதமும் வழங்கப்பட்டுள்ளது. தனது 76வது பிறந்தநாளை கொண்டாடிய மனோரமா ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். தான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது, பலர் தமக்காக பிரார்த்தனை செய்ததாகவும், தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும் அதற்காக தான் நன்றியை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.