Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவின் ரசிகன் நான்! பவர்ஸ்டார் உற்சாகம்!!

26 மே, 2014 - 15:42 IST
எழுத்தின் அளவு:

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை ஒரு பெரும் கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் அவர் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது, மோசடி வழக்கில் சிக்கியதால் அவர் கமிட்டான படங்களில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதையடுத்து ஜெயிலுக்கு சென்ற அவர் ஜாமீனில் வெளியே வந்தபோதும் அவர் பக்கம் யாரும் திரும்பவில்லை.


மேலும், அவர் பெரிதாக எதிர்பார்த்த சந்தானம்கூட வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் பவர்ஸ்டாரை ஒரேயொரு ஷாட் மட்டும் காண்பித்து விட்டு முடித்துக்கொண்டார். இதனால் சினிமாவில் தனக்கு எதிர்காலம் இல்லாமல் போய் விடுமோ என்று அவர் புலம்பிக்கொண்டுவந்த நேரம்தான் இப்போது கிடாய் பூசாரி மகுடி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பவர்ஸ்டாருக்கு கிடைத்துள்ளது.


சந்தானம் காமெடியனாக இருந்து ஹீரோ ஆனது போல், காமெடியன் பவர்ஸ்டாரை இப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க வைக்கிறார்களாம். அதோடு, இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். அதனால், சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கிறார் பவர்ஸ்டார். இளையராஜாவின் பெரிய ரசிகன் நான். அதனால் அவர் நான் நடிக்கிற படத்துக்கு இசையமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி வரும் பவர்ஸ்டார், தனது எதிர்பார்ட்டி நடிகர்களுக்கெல்லாம் இந்த விசயத்தை தெரியப்படுத்தி தனது சந்தோசத்தை கொண்டாடி வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in